நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 04/02/2025 | Edited on 04/02/2025

துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிறது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் தனது திறமையான நடிப்பால் ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மகாநடி’, ‘குரூப்’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான  ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’  என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.  

இந்த நிலையில் அவர் 13 ஆண்டு கடந்ததையொட்டி அதை சிறப்பிக்கும் வகையில் அவர் புதிதாக நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. காந்தா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘ஹண்ட் ஃபார் வீரப்பன்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தொடரை இயக்கிய செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர் துல்கர் சல்மானின் 13 வருட சினிமா பயணத்தை பெருமைப்படுத்தும் வகையில் ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திரைப்படம், துல்கரின் சினிமா வாழ்க்கையைப் போலவே பல பரிணாமம், சவால் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின்  பிரதிபலிப்பாக அமையும். இது நிச்சயம் அவருக்கான படமாக இருக்கும்” என்றார். 

Advertisement

இந்த திரைப்படத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளது. நடிகர் ராணா டகுபதி, அவரது தாத்தா டி. ராமாநாயுடுவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனமும் நடிகர் துல்கர் தலைமையிலான வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. ‘காந்தா’ படத்தின் முதல் பார்வையைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.