தொழில்நுட்பம்
2 ஆண்டுகளுக்கு யூடியூப் பிரீமியம் இலவசம்: ஜியோ அசத்தல் அறிவிப்பு

2 ஆண்டுகளுக்கு யூடியூப் பிரீமியம் இலவசம்: ஜியோ அசத்தல் அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்டு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு யூடியூப் பிரீமியம் இலவசமாக பெறலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் விளம்பரமில்லா யூடியூப் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை பெறலாம். ஜியோ மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றை வழங்குவதன் மூலம் அதன் பிராட்பேண்ட் அனுபவத்தை மேம்படுத்துகிறது.யூடியூப் பிரீமியம் மூலம், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களை பேக்கிரவுண்டில் ப்ளே செய்த படி தங்கள் வேலைகளை செய்யலாம். பிரீமியம் சேவையில் ஸ்கீரின் ஆஃப் ஆகி இருந்தாலும் வீடியோக்கள் ப்ளே ஆகும். மிக முக்கியமாக, பயனர்கள் பிளாட்ஃபார்மின் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலியான யூடியூப் மியூசிக்கை அணுக முடியும், அதனால் இது பல்வேறு நன்மைகளை பயனருக்கு கொடுக்கிறது. ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499, ரூ.3499 ஆகிய ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்ஃபைபர் திட்டத்தில் யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக பெறலாம்.