இலங்கை
உயர்தரப் பரீட்சை – ஏற்பாடுகள் பூர்த்தி!

உயர்தரப் பரீட்சை – ஏற்பாடுகள் பூர்த்தி!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பரீட்சையை பிற்போடுமாறு சில தரப்பினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அது தொடர்பில் கல்வியமைச்சும் கவனம் செலுத்தியிருந்தது. எவ்வாறெனினும் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட முக்கியமான பரீட்சைகளுக்கான தினம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையை பிற்போட முடியாத நிலை உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.