சினிமா
சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..

சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும்.
இப்படத்தில் சூர்யாவைத் தவிர, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, வத்சன் சக்ரவர்த்தி, ஆனந்தராஜ், சுரேஷ் சந்திர மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் ஒரு ஃபேண்டஸி பீரியட் ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நகரில் நடைபெற்றது.
இந்நிலையில், முதலில் ஒக்டோபர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் வருகின்ற 14-ம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளநிலையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல், தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு மனு அரசுக்கு அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் இருந்து நடிகை திஷா பதானி கங்குவா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், அதே போல் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் கார்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.