உலகம்
டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!

டெபாசிட் இழந்த பிரசாந்த் கிஷோர் கட்சி! அனைத்திலும் வென்ற பாஜக கூட்டணி!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் காலியாக இருந்த 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று சட்டமன்ற இடைத் தேர்தல் நடந்தன.
இதில் குறிப்பாக பிகார் மாநிலத்தில், இமாம்கஞ்ச், தராரி, ராம்கர் மற்றும் பெலாகஞ்ச் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில், நான்கு தொகுதிகளையும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதன்படி 4 தொகுதிகளுக்கான தேர்தலில் இமாம்கஞ்ச் தொகுதியை ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தக்கவைத்தது. மார்க்சிஸ்ட் வசமிருந்த தராரி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த ராம்கர் தொகுதிகளை பாஜக-வும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வசமிருந்த பெலாகஞ்ச் தொகுதியை ஐக்கிய ஜனதாதளமும் வென்றன. இதன்படி, 4 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.
இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: பாஜக கூட்டணியில் முதல்வர் தேர்வில் சர்ச்சையா? – ஃபட்னாவிஸ் விளக்கம்!
அதேநேரம், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கடந்த மாதத்தில் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது. ஆனால், இதில், மூன்று தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இது பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.