உலகம்
தனக்கு தானே சிலை திறந்தாரா ஆளுநர் ஆனந்த் போஸ்? – மேற்கு வங்கத்தில் சர்ச்சை

தனக்கு தானே சிலை திறந்தாரா ஆளுநர் ஆனந்த் போஸ்? – மேற்கு வங்கத்தில் சர்ச்சை
மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் தனது மார்பளவு சிலையை ஆளுநர் ஆனந்த் போஸ் திறந்து வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் ஆளுநராக ஆனந்த் போஸ் பதவியேற்று சனிக்கிழமையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகையில் தனது மார்பளவு சிலையை ஆனந்த் போஸ் திறந்து வைத்ததாக புகைப்படம் வெளியானது.
இதனை விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, விளம்பரத்துக்காக ஆளுநர் இதுபோன்ற உத்திகளை கையாள்வதாக சாடியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, பார்த்தா சாஹா என்ற கலைஞர் உருவாக்கிய ஆனந்த் போஸ் சிலை அன்பளிப்பாக பெறப்பட்டதாகவும், அந்த சிலை ஆளுநர் மாளிகையில் நிறுவப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் தற்போது அரசியல் சூழல் மோசமாக இருப்பதாகவும் ஆளுநர் ஆனந்த் போஸ் தெரிவித்துள்ளார்.