சினிமா
தாய்லாந்து சுற்றுலா ஆலோசகராக சோனு சூட் நியமனம்

தாய்லாந்து சுற்றுலா ஆலோசகராக சோனு சூட் நியமனம்
தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட், தமிழில் ‘கள்ளழகர்’, ‘ஒஸ்தி’, ‘அருந்ததி’, ‘தமிழரசன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். உதவு குணம் கொண்ட அவர், கொரோனா லாக்டவுனில் மற்றவர்களுக்கு செய்த உதவிகளின் மூலம் நாடு முழுவதும் பேசப்பட்டார்.
தற்போது கூட அவர் பல்வேறு உதவிகள் செய்கிறார். இந்நிலையில், தாய்லாந்து சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதராகவும், கவுரவ ஆலோசகராகவும் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தாய்லாந்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மேற்கொள்வார். இதற்காக தாய்லாந்து அரசுக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.