சினிமா
நயன்தாராவின் திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்…

நயன்தாராவின் திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்…
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான “நயன்தாரா – பியோண்ட் தி ஃபேரி டேல்” நவம்பர் 18 ஆம் திகதி வெளியிடப்படும் என நெட்ஃபிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது, இந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி நயன்தாரா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், அவரது ரசிகர்கள் நயன்தாராவின் வாழ்க்கையையும், அன்றாட வழக்கத்தையும் ஒரு சிறப்பு ஆவணப்படத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கிடையில், நயன்தாரா அடுத்ததாக ஆர்.மாதவன் மற்றும் சித்தார்த்துடன் ‘டெஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். மேலும், அவர் தனது தோல் பராமரிப்பு பிராண்டான 9 ஸ்கைனை 2023 இல் அறிமுகப்படுத்தினார், இப்போது ரிலையன்ஸின் தீரா பியூட்டியுடன் இணைந்துள்ளார்.