இந்தியா
மகாராஷ்டிரா முதல்வராகும் ஃபட்னாவிஸ்: துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார்

மகாராஷ்டிரா முதல்வராகும் ஃபட்னாவிஸ்: துணை முதல்வர்களாக ஷிண்டே, அஜித் பவார்
பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அஜித் பவாருடன் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது.இன்று திங்கள்கிழமை பா.ஜ.க தலைமை தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயரை ஏர்கொண்டதாகவும், இதற்கு ஷிண்டே தலைமையிலான கூட்டணிக் கட்சிகளான சிவசேனா மற்றும் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) ஆகியவற்றின் ஒப்புதலையும் பெற்றதாகவும் இரண்டு முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர். ஆங்கிலத்தில் படிக்கவும்: Devendra Fadnavis likely to become Maharashtra CM, Eknath Shinde and Ajit Pawar Deputy CMs“தேவேந்திர பட்னாவிஸின் பெயரை முதல்வராக பாஜக தலைமை அங்கீகரித்துள்ளது,” என்று பா.ஜ.க-வின் உள்விவகார தலைவர் ஒருவர் தெரிவித்தார். மஹாயுதியின் தலைவர் ஒருவர் பேசுகையில், “முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தவிர, சிவசேனா மற்றும் என்.சி.பி ஆகிய இரு கட்சிகளும் தலா ஒரு துணை முதல்வராக இருப்பார்கள்” என்று கூறினார். எவ்வாறாயினும், சிவசேனாவின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக்குவது குறித்து எங்களிடம் எந்த ஆலோசனையும் இல்லை. மேலும் எங்கள் கட்சி இன்னும் முதல்வராக எந்த பெயரையும் ஏற்கவில்லை” என்று அவர் கூறினார்.முதல்வர் பதவியை தக்கவைக்க வேண்டும் என எதிர்பார்த்த ஏக்நாத் ஷிண்டே, பவாருடன் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் ஷிண்டே பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, சிவசேனாவுக்கு சுமார் 12 அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கலாம் மற்றும் சில முக்கிய இலாகாக்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. என்.சி.பி-க்கு சுமார் 10 அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் மந்திரி சபைக்கு அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் வரம்பு முதல்வர் உட்பட 43 ஆகும். 132 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள பா.ஜ.க 21 அமைச்சர் பதவிகளை தனக்குத்தானே தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.பா.ஜ.க தக்கவைத்துக் கொள்ள ஆர்வமாக உள்ள உள்துறை, நிதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வருவாய் ஆகிய நான்கு முக்கிய இலாகாக்கள் இப்போது கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. பா.ஜ.க-வினர் வீட்டு வசதி மற்றும் நிதித்துறையைவலியுறுத்தலாம் என, பா.ஜ.க-வினர் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், அமைச்சர் பதவிகள் மற்றும் இலாகாக்களின் எண்ணிக்கை குறித்த சில கடைசி நிமிட பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதிகாரப் பகிர்வு விவரங்கள் மற்றும் அமைச்சரவை அமைப்பு குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஏக்நாத் ஷிண்டே, ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோருடன் மாலை கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பா.ஜ.க தலைமை அதன் கூட்டணிக் கட்சிகளின் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் கவலைகளை முடிந்தவரை இடமளிப்பதாக உறுதியளித்ததாக அறியப்படுகிறது.2014-ல் ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்று ஐந்தாண்டு காலம் பதவி வகித்தார். அப்போது, பிளவுபடாத சிவசேனாவுடன் பா.ஜ.க கூட்டணியில் இருந்தது. 2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அஜித் பவாருடன் ஃபட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க கைகோர்த்தது. ஃபட்னாவிஸ் முதல்வராகவும், பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால் அஜித் தனது மாமாவும் தற்போதைய என்.சி.பி (எஸ்பி) தலைவருமான சரத் பவார் அணிக்கு திரும்பியதால் அந்த அரசாங்கம் சுமார் 80 மணி நேரம் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“