சினிமா
வெளிநாட்டு உரிமம் விற்பனையில் ‘விஜய் 69’ மாபெரும் சாதனை

வெளிநாட்டு உரிமம் விற்பனையில் ‘விஜய் 69’ மாபெரும் சாதனை
‘விஜய் 69’ படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்பனையில் மாபெரும் சாதனை புரிந்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘விஜய் 69’. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போது தான் படப்பிடிப்பே தொடங்கி இருக்கும் நிலையில், வெளிநாட்டு உரிமம் பெரும் விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.
‘விஜய் 69’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. சுமார் 78 கோடிக்கு இதனை கைப்பற்றி இருக்கிறது. இதற்கு முன்னதாக எந்தவொரு தமிழ் படமும் இந்த விலைக்கு விற்பனையானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிறுவனம் தான் ‘கோட்’ படத்தின் உரிமையினையும் கைப்பற்றியது.
‘விஜய் 69’ படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கே.வி.என் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்து வருகிறது.