Connect with us

சினிமா

‘Free Fire’ கேம் உடன் புஷ்பா-2 படக்குழு ஒப்பந்தம்!

Published

on

Loading

‘Free Fire’ கேம் உடன் புஷ்பா-2 படக்குழு ஒப்பந்தம்!

புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போது படக்குழு தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாகப் படத்தில் இடம்பெற்றுள்ள கவர்ச்சியான பாடலில் நடிகை ஸ்ரீ லீலா ஆட உள்ளதாகச் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

Advertisement

இப்படி, முதல் பாகத்தின் அளவிற்கு இரண்டாவது பாகத்தின் எதிர்பார்ப்பைக் கொடுத்து எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யப் படக்குழு பல அதிரடியான விஷயங்களைச் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது புஷ்பா 2 திரைப்படத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் விளையாட்டான பிரீ பையர் (free fire) உடன் கைகோர்த்து இருக்கிறது.

எனவே, படம் வெளியாகும் வரை புஷ்பா படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை கேம்குள் கொண்டு வர garena திட்டமிட்டுள்ளது. அடுத்த அப்டேட்டாக இதனைக் கொண்டுவரவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் கண்டிப்பாக புஷ்பா 2 படம் வழக்கத்தை விட இன்னும் கேம் விளையாடும் கேம் பிரியர்களுக்கு மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும்.

அந்த நோக்கத்தில் தான் புஷ்பா 2 படக்குழு இந்த முறை (free fire) உடன் கைகோர்த்து உள்ளது. மேலும், புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகும் திகதி குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 படத்தின் டிரைலர் வரும் நவம்பர் மாதம் 17-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன