விளையாட்டு
IPL Auction 2025: ஐபிஎல் ஏல வரலாற்றில் உச்சம்… ரூ. 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்

IPL Auction 2025: ஐபிஎல் ஏல வரலாற்றில் உச்சம்… ரூ. 26.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் ஏல வரலாற்றில் உச்சமாக ரூ. 26.75 கோடி தொகைக்கு ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) விலைக்கு வாங்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஐபிஎல் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 18 கோடி கொடுத்து ஆர்.டி.எம் முறையில் தக்க வைத்துக் கொண்டது.
அதைத் தொடர்ந்து தற்போதைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது. அவரை வாங்குவதற்கு ஒவ்வொரு அணிகளும் அதிக ஆர்வம் காட்டின.
𝐌𝐮𝐧𝐝𝐚 𝐟𝐮𝐥𝐥 𝐩𝐚𝐜𝐞 𝐜𝐡𝐚𝐥𝐝𝐚! 🔥🤩#ShreyasIyer #IPL2025Auction #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/IOtPf5wzBT
இறுதியாக பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஏலத்தில் கடுமையாக போட்டியிட்டது. ஒவ்வொரு அணிகளும் 25 லட்ச ரூபாயை உயர்த்திக் கொண்டே சென்றதால் அதிக பரபரப்பு காணப்பட்டது. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடி ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்துக் கொண்டது.