Connect with us

விளையாட்டு

IPL Auction 2025: யார் யார் எந்த அணி..? முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Published

on

IPL Auction 2025: யார் யார் எந்த அணி..? முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Loading

IPL Auction 2025: யார் யார் எந்த அணி..? முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் ரூ.2 கோடியை அடிப்படைத் தொகையாக வைத்து 82 வீரர்களும், ரூ.1.5 கோடியை அடிப்படைத் தொகையாக வைத்து 27 வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

Advertisement

ஒவ்வொரு அணியும் ரூ.120 கோடி வரை வீரர்களை வாங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியை, வீரர்களைத் தக்கவைப்புக்காக அனைத்து அணிகளும் செலவு செய்திருந்ததால், மீதம் இருந்த தொகையை வைத்து அனைத்து அணிகளும் ஏலத்தில் பங்கெடுத்தது.

ஏலத்தின் முதல் நாளான நேற்று 84 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டார்கள். அவர்களில் 72 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். மீதம் உள்ள 12 பேரை எடுக்க நேற்று எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 467.95 கோடியை வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக அணிகள் செலவு செய்துள்ளது.

இதையும் படிக்க:
19 வயது ஆப்கன் வீரரை ரூ. 10 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே… யார் இந்த நூர் அகமது?

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, மதீஷா பத்திரனா, ஷிவம் துபே

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர்

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள்,

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ஜோஷ் ஹேசல்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ராசிக் தர், சுயாஷ் சர்மா

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அபிநவ் மனோகர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், அதர்வா டைடே

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துரூவ் ஜூரல், ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மியர், சந்தீப் சர்மா

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர்,  வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா

Advertisement

பஞ்சாப் கிங்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங்,

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங், சாஹல், ஸ்டோனிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல், விஜயகுமார் வைஷாக், யாஷ் தாக்கூர், ஹர்பிரீத் சிங், விஷ்ணு வினோத்

Advertisement

மும்பை இந்தியன்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ட்ரெண்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ன் சர்மா

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், ஆயுஷ் படோனி, மொஹ்சின்

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த்,  அவேஷ் கான், டேவிட் மில்லர், அப்துல் சமத், மிட்செல் மார்ஷ், மார்க்ராம், ஆர்யன் ஜூயல்

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, ராமன்தீப் சிங்

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், ஆன்ரிச் நார்ட்ஜே, டி காக், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரஹ்மானுல்லா குர்பாஸ், வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே

Advertisement

இதையும் படிக்க:
நடராஜனுக்கு ஜாக்பாட்.. 3 அணிகள் போட்டி.. ரூ.10.75 கோடிக்கு ஏலம் போன வேகப்புயல்

குஜராத் டைட்டன்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், திவாட்டியா

Advertisement

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: ஜாஸ் பட்லர், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரஷித் கிருஷ்ணா, லோம்ரோர், குஷாக்ரா, நிஷாந்த், ராவத், சுதர்

டெல்லி கேப்பிடல்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்,

Advertisement

ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்: கே.எல். ராகுல்,  மிட்செல் ஸ்டார்க், நடராஜன், ஜே.எஃப்.எம், புரூக், அசுதோஷ் சர்மா, மோஹித் சர்மா, ரிஸ்வி, கருண் நாயர்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன