Connect with us

விநோதம்

இரண்டு செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்!

Published

on

Loading

இரண்டு செல்ஃபி கேமராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்!

“இன்று ஒரு தகவல்”

சியோமி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  ஸ்மார்ட்போனான சியோமி 14 சிவி (Xiaomi 14 CIVI) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

சியோமி நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இப்போது இந்தியாவில் புதிய அம்த்துடன் சியோமி 14 சிவி வெளியிட்டுள்ளது.

இது க்ரூஸ் ப்ளூ, மேட்சா க்ரீன் மற்றும் ஷேடோ பிளாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தி உள்ளது.

சியோமி 14 சிவியில்  உள்ள பிற மொபைல்களை போலவே லிகா-பிராண்டட் 50-எம் பி டிரிபிள் ரியர் கேமராக்களை இந்த மொபைல் கொண்டுள்ளது. இருந்தாலும் இது டூயல் ஃப்ரன்ட் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.

Advertisement

இதற்கு 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆகிய 2 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இது இந்திய விலைப்படி 42,999 ரூபா மற்றும் 47,999 ரூபாஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதை தவிர இது சிம் சப்போர்ட் கொண்ட புதிய சியோமி 14 சிவி மொபைலானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கைபர் ஒஸ் இயங்குகிறது.

Advertisement

இந்த மொபைல் 6.55-இன்ச் 1.5கே கர்வ்ட் அம்லீட் டிஸ்ப்ளே, 120ஏச் சட் ரெஃப்ரஷ் ரேட் , 240ஏச் சட் டச் சேம்ப்ளிங் ரேட் , 446பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3,000நிட்ஸ் பிரைட்னஸை கொண்டுள்ளது.

இது 12ஜிபி வரை எல் பி ரீ ரீ ஆர் 5 ரேம் மற்றும் 512ஜிபி யு எவ் எஸ் 4.0 ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐஸ் லுாப்  கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. சியோமி 14 சிவிஐ போலவே, சியோமி 14 சிவி மொபைலும் ட்ரிபிள் ரியர்  கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

Advertisement

இதன் பின்புறத்தில் 50எம் பி லைட் ஃப்யூஷன் 800 இமேஜ் சென்சார் உடன் வருகிறது.

இது தவிர, போனில் 50எம் பி டெலிஃபோட்டோ  கேமரா, 12எம் பி அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

சியோமியின் இந்த போன் 2 ஃப்ரன்ட் கேமராக்களுடன் வருகிறது. 32எம் பி பிரைமரி செல்ஃபி கேமரா மற்றும் 32எம் பி அல்ட்ராவைடு செல்ஃபி கேமராவுடன் இந்த மொபைல் வருகிறது.இதில் இன்னும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன.

Advertisement

கனெக்டிவிட்டியை பொறுத்த வரை இந்த மொபைலில் 5ஜி, வைபை 6, என் எவ் சி, ப்ளூடூத் 5.4, ஜிபி எஸ், கலிலியோ, குளோனாஸ்,பெய்டூ,என் எவ் சி  மற்றும் யு எஸ் பி தைப்சி போர்ட் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்த மொபைல் டால்பி அட்மோஸ் சப்போர்ட்டுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

இதில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் எஐ-பேக்ட் ஃபேஸ் அன்லாக் சிஸ்டம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் 67டபில்யு வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 4,700எம் எ ஏச் பேட்டரி உள்ளது.

Advertisement

பூஜ்யத்தில் இருந்து  பேட்டரி சார்ஜ் செய்ய துவங்கிய 30 நிமிடங்களுக்குள் 80% சார்ஜாகி விடும் அளவிற்கு சிறப்பம்சங்களை கொண்டு காணப்படகின்றது.(ப)
 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன