விநோதம்
உருளைக்கிழங்கு; தினமும் சாப்பிட்டால் என்ன பலன்!!

உருளைக்கிழங்கு; தினமும் சாப்பிட்டால் என்ன பலன்!!
உருளைகிழங்கு- தினமும் சாப்பிட்டால் என்ன பலன்!!
(இன்று ஒரு தகவல்)
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு.
இது நமது விருப்பத்திகேற்ப சமைத்து சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
சரும நிறத்தை மாற்றி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேலையை உருளைகிழங்கு செய்கிறது.அந்த வகையில் உருளைகிழங்கு சாப்பிட்டால் என்ன மாதிரியான நன்மைகளை நாம் பெறலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் வளமாக இருக்கின்றன. இது உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது ஆகையால் அடிக்கடி சாப்பிடலாம் ஆனால் தினமும் சாப்பிடக் கூடாது.
செரிமானத்திற்கு உதவிச் செய்யும் நார்ச்சத்து உருளைகிழங்கில் இருக்கிறது இது மலச்சிக்கலை தடுக்கும்.
இதய நோய், பக்கவாதம்,வகை 2 நீரிழிவு மற்றும் குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை உருளைகிழங்கு குறைக்கும் என கூறப்படுகின்றது.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9 (ஃபோலேட்) உள்ளிட்ட பல வைட்டமின்கள் இருக்கின்றன. அத்துடன் உடலுக்கு அவசியமான பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல தாதுக்களும் இருக்கின்றன. இவை ஹார்மோன் மாற்றங்கள், எலும்பு வலிமைப்படுத்தல், செல்களின் வளர்ச்சி போன்றவைக்கு உதவியாக இருக்கின்றது.
ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்பட பல ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உருளைகிழங்கில் இருக்கின்றன இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து எம்மை காக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உருளைகிழங்கை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் வருவது கட்டுபடுத்தப்படுகிறது.
மனித உடலிலுள்ள செல்களில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்து ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் வேலையை செய்கிறது.(ப)