Connect with us

கதைகள்

எண்ணப்படி தான் வாழ்வு | Life is according to thought | Stories Tamil

Published

on

Loading

எண்ணப்படி தான் வாழ்வு | Life is according to thought | Stories Tamil

 ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும். 

Advertisement

இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான். 

என்ன ஆச்சரியம்! 

அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான். நாள் முழுவதும் கடினமாக  உழைத்ததால் அவனுக்கு உடம்பெல்லாம் வலித்தது.  இந்த சமயத்தில் முதுகு, கை, கால் பிடித்து விட இளம் பெண் ஒருத்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதில் எண்ணினான். 

Advertisement

என்ன அதிசயம்! 

அடுத்த கணம் அங்கு ஓர் இளம்பெண் தோன்றி அவனுடைய கை கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். விறகு வெட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை, அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான், அவன் ஆச்சரியப்பட்டான். நினைப்பதெல்லாம் நடக்கின்றதே இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான். 

மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். 

Advertisement

அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா  இருக்கிறோம்?.இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்து நம்மை கொன்று விட்டால் என்னவாகும்?” என்று நினைத்தான். 

மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றி அவனை கொன்று விட்டது. 

நீதி : நம் என்ன படி தான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன