இலங்கை
கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு!

கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு!
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் க.யுவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் பிரதீபா காயத்திரி கஜபதி கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் பல வருடங்களாக சேவையாற்றிய ஓய்வு நிலை முன்பள்ளி ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். சிறந்த முன்பள்ளிகளும் மதிப்பளிக்கப்பட்டன. முன்பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் குறித்த ஆசிரியர் தின நிகழ்வை மேலும் அலங்கரித்தன
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளை அதிகாரி லெப்.கேர்ணல் K.j பீரீஸ் ,கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன், கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சு.தர்மரத்தினம் ,பூநகரி கோட்டக்கல்விப்பணிப்பாளர் நா.கணேஸ்வரநாதன், கரைச்சி பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜென்சி, பூநகரி பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் த.ராஜசிறீ, ஓய்வு நிலை முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர்களான சி.சிவநாதன், செ.விந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் தெற்கு வலயத்திற்குற்பட்ட அனைத்து முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். (ப)
,