விநோதம்
குழந்தைகளை கவரும் வண்ணமீன்கள்…!! வாஸ்து மீன்கள் எப்படி வாங்க வேண்டும் தெரியுமா ?

குழந்தைகளை கவரும் வண்ணமீன்கள்…!! வாஸ்து மீன்கள் எப்படி வாங்க வேண்டும் தெரியுமா ?
இன்றைய சூழ்நிலையில் வண்ண மீன் வளர்ப்பு என்பது வளர்ந்து வரும் ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்படுகிறது. இது ஒரு நல்ல வருவாய் தரும் தொழிலாக மட்டுமல்லாமல்,மனித மனதிற்கு சந்தோஷத்தையும், அமைதியையும் தருகின்றன.பொதுவாக வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி வளர்ப்பதைப்போன்று பலவிதமான வண்ண மீன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
இது குறித்து வண்ண மீன்கள் விற்கும் கடையின் உரிமையாளர் கூறும்போது, பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களின் முகப்பிலும் மிகப்பெரிய மீன்தொட்டிகள் வைத்து விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன. பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் வளர்க்கின்றனர் என்று கூறினார்.
மேலும் வாஸ்து கொள்கைகளின்படி, சில மீன்களை வீட்டில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலாய் விலக்கும், செல்வம் அதிகரிக்கும் என்பதால் பெரும்பான்மையோர் வண்ண மீன்களில் வாஸ்து மீன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் மாலிஸ், கோல்டு பிஷ், ஏஞ்சல், டெட்ராஸ், கப்பீஸ் பார்ஸ், பைட்டர் ஆகிய லோக்கல் கலர் மீன்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கலர் மீன்களின் ஆயுட்காலம் நான்கு ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுவரை தான் என்பதால் மீன்கள் வளர்க்க சரியான தட்ப வெப்ப நிலை உணவு, ஆக்ஸிஜன்தான் முக்கியம். எனவே வண்ண மீன்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க