Connect with us

இந்தியா

க்யூ ஆர் கோடு வசதி; பான் 2.0 திட்டத்திற்கு கேபினட் ஒப்புதல்: பழைய பான் கார்டு செல்லாதா?

Published

on

pan ca

Loading

க்யூ ஆர் கோடு வசதி; பான் 2.0 திட்டத்திற்கு கேபினட் ஒப்புதல்: பழைய பான் கார்டு செல்லாதா?

க்யூ ஆர் கோடு வசதி உடன் தற்போதுள்ள பான் கார்டை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு திங்களன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  மேலும், பான் காட்டை பொது வணிக அடையாளமாக மாற்றுவதற்கும் ஒப்புதல் அளித்தது.ரூ.1,435 கோடி செலவில் வருமான வரித் துறையின் பான்.2.0 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இதன் கீழ் தற்போதுள்ள அமைப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து டிஜிட்டல்  அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் அட்டை மாற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.ஏற்கனவே பான் கார்டு  வைத்திருப்பவர்கள் புதிய வசதியை இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பான் 2.0 திட்டம், பான் அட்டையை “உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாக” உருவாக்க முன்மொழிகிறது. ஆங்கிலத்தில் படிக்க:    Cabinet clears PAN 2.0, card to feature QR code“புதிய பான் கார்டுகளில் QR  கோடு இருக்கும். ஏற்கனவே பான் வைத்துள்ளவர்கள் பழைய பான் கார்டை QR  கோடு உள்ளது போல்  மாற்றிக் கொள்ள முடியும்” என்று நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 98 சதவீதம் தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன