இலங்கை
சட்டவிரோதமாக மணல் அகழ்வு; 14டிப்பர் மணல் பொலிஸாரால் பறிமுதல்!

சட்டவிரோதமாக மணல் அகழ்வு; 14டிப்பர் மணல் பொலிஸாரால் பறிமுதல்!
கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் குறித்த 14டிப்பர் மணலையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் நாளைய தினம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)