விளையாட்டு
சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்!

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்!
பேர்த்தில் நடந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் 534 என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா, அவுஸ்திரேலியாவை 238 ஓட்டங்களுக்குள் சுருட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர் இந்தியா 61.11 சதவீத புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. (ச)