Connect with us

இலங்கை

சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு!

Published

on

Loading

சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 6 மேலதிக வாக்குகளைப் பெற்று  கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயற்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத்  தரமுயர்த்தப்பட்டது.  

சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும்,  நோய் நாடல் சிகிச்சை,  குணபாடம்,  மூலதத்துவம் ஆகிய கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.    

சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளில் இருந்து முன்னாள் துறைத் தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான  கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் பதில் பீடாதிபதியாகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன