Connect with us

இலங்கை

செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு!

Published

on

Loading

செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு!

செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D) வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் canada fund for local lnitiatives(CFLI), Canada srilanka convention (CSBC) இணைந்து மேற்கொள்ளும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் பொறியியல் பீடபீடாதிபதி பேராசிரியர் ஏ.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் Eric Walsh கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்-சிறீசற்குணராஜா, பேராசிரியர் Prema Arasu (usa/Malaysia, former scholar, பேராசிரியர் கே.Chelvakumar, (chair Entrepreneur ship and mentoring),பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுவலுவுள்ளோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

தொடர்ந்து கனேடிய தூதுவர் பொறியியல் பீடத்திற்கு விஜயம் செய்து செயற்கை அவயங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடத்தையும் பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன