உலகம்
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்பது எப்போது…4வது முறையாக பதவியேற்கும் ஹேமந்த சோரன்!

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்பது எப்போது…4வது முறையாக பதவியேற்கும் ஹேமந்த சோரன்!
ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக அவர் பதவியேற்க உள்ளார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் காங்கிரஸைச் சேர்ந்த 6 பேரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.