Connect with us

திரை விமர்சனம்

டிமான்டி காலனி 2 – திரை விமர்சனம் 

Published

on

Loading

டிமான்டி காலனி 2 – திரை விமர்சனம் 

 

இப்போதெல்லாம் பார்ட் 2 படங்கள் வெளியானால் பெரிய அளவில் விமர்சனங்களை பெறாமல் தோல்வி அடைந்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணமே முதல் பாகத்தின் மீது மக்கள் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்து படம் ஹிட் ஆனதால், இரண்டாவது பாகத்தில் அதனை விட அதிகமாக மக்கள் இரண்டாவது பாகத்தின் மீது வைத்து இருப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இல்லாமல் போவதால் படம் தோல்வி அடைகிறது.

Advertisement

இருப்பினும், பல இயக்குனர்கள் கதையின் மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது பாகங்களை இயக்கி வருகிறார்கள்.  அப்படி தான் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி படத்தினுடைய இரண்டாவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்திலும் அருள்நிதி ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஒகஸ்ட் 15-ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் வருண் என்பவர் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியுள்ளார். படம் பார்த்துவிட்டு அவர் கூறியதாவது ” டிமான்டி காலனி 2 படத்தின் திரைக்கதை மிகவும் அருமையாக இருக்கிறது. ஒகஸ்ட் 15-ஆம் திகதி அஜய் ஞானமுத்து  திரைக்கதை பற்றி தான் சினிமாவில் பேசப்படும். மகாராஜா படத்திற்கு பிறகு இப்போது டிமான்டி காலனி  வெளிநாட்டு உரிமையைப் பெறுவது மிகவும் அதிர்ஷ்டம்.

Advertisement

நான் என் வாழ்நாளில் ஒரு திகில் திரைப்படத்தை இருக்கையின் நுனியில் பார்த்ததில்லை, 2 மணிநேரம் 30 நிமிடங்களுக்கு எனது மொபைல் போனை தொட்டதில்லை. வாய்ப்பு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி. பிரியா பவானி சங்கர் எதிர்மறை மற்றும் ட்ரோல் அனைத்தும் இந்தப் படத்துடன் முடிந்துவிடும் அற்புதமான நடிப்பு. அருள்நிதி நல்ல கதையை தேர்வு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நீங்கள் எப்படி தவறை கண்டுபிடிப்பீர்கள் என்று அனைத்து விமர்சகர்களுக்காகவும் வருந்தவும்” எனவும் கூறியுள்ளார். இவர் இந்த அளவுக்கு படத்தை பற்றி பாராட்டியுள்ள காரணத்தால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. [எ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன