Connect with us

விநோதம்

நாய் வளர்ப்பதால் நோய் ஆபத்து குறையுமாம்!

Published

on

Loading

நாய் வளர்ப்பதால் நோய் ஆபத்து குறையுமாம்!

நாய்களை வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அதனை பாராமரிப்பதும், பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் பொறுப்பான செயலாகும்.

சிலருக்கு இது ஒரு பொழுதுஆபோக்காக காணப்படுகின்றது. இதில் பலருக்ம் தெரியாத உண்மை உன்று உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் நாய் வளர்ப்பதில் உள்ள நற்பலன்களை விவரித்துள்ளது.

Advertisement

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி நாய்களுடன் வளர்வது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமை தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரோன் நோய் என்பது இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தால் உண்டாகும் கடுமையான குடல் அழற்சி நிலையாகும்.இது மெதுமெதுவாக உயிரை காவு வாங்க கூடிய ஒரு நோய் வகையாகும்.

இது வந்துவிட்டால் முழுமையாக நம் உடலையும் அதன் முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதன் காரணமாக இந்த நோய் வச்தவுடன் கண்டறிந்து வைத்தியரிடம் முழமையான சிகிச்சையை பெற்றுக்கொள்வது நன்மை தரும்.

Advertisement

மேலும் இந்த நோய் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய சுற்றுச்சூழல் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதனை மட்டுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதில் நம்ப முடியாத ஒரு விஷயமும் உள்ளது. செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுடன் வளரும் ஆரம்பகால வெளிப்பாடாக குடல் பாக்டீரியா, குடல் ஊடுருவல் மற்றும் இரத்த உயிரியக்கவியல் ஆகியவற்றில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ்கின்றன.

ஒரு நாயுடன் வாழும்போது இந்த நன்மையான மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களால் துல்லியமாக சுட்டிக்காட்ட முடியவில்லை ஆனால் அவர்களின் தரவு இந்த இணைப்பை வலுவாக பரிந்துரைக்கிறது.கிரோன் நோயின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய பல சுற்றுச்சூழல் காரணிகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து உள்ளனர்.

Advertisement

வாழ்க்கையின் குழந்தை பருவத்தின் முதல் ஆண்டில் ஒரு பெரிய குடும்பத்துடன் வாழ்வது ஆபத்தை கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும், ஆய்வின் போது, ​​தங்கள் வீட்டில் பறவைகளை வைத்திருந்த நபர்களுக்கு கிரோன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

ஆனால் நாள்களை வளர்க்கும் போது இந்த நோய் கணிசமாக குறைகிறது. இந்த நோய் பாதிப்பை வலுவடைய சுற்றுச்சூழல் காரணிகள் எவ்வாறு அடிப்படை என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன