இலங்கை
நிலவும் சீரற்ற காலநிலையால் யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலையால் யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரீ. என் சூரியராஜா தெரிவித்தார்.
தாழ் நிலப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள 15 மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி, ஊர் காவல்துறை, சண்டிலிப்பாய், உடுவில், கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட 191 குடும்பங்களைச் சேர்ந்த 7010 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற கால நிலை காரணமாக நிலவிய மின்னல் தாக்கம் மற்றும் காற்று காரணமாக 27 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். (ப)