Connect with us

டி.வி

மருமகளை பார்க்கனும்… அடம் பிடித்த அம்மா: மகன் போட்ட மாஸ்டர் ப்ளான் வொர்கஅவுட் ஆகுமா?

Published

on

KarthiGga

Loading

மருமகளை பார்க்கனும்… அடம் பிடித்த அம்மா: மகன் போட்ட மாஸ்டர் ப்ளான் வொர்கஅவுட் ஆகுமா?

அடம்பிடித்த அபிராமி.. கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் ‌‌கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் சாமுண்டீஸ்வரிக்கு தெரியாமல் கோவில் அருகே வந்து மீட்டிங் அட்டென்ட் செய்த நிலையில் இன்று, கார்த்திக் ஒரு வழியாக சாமுண்டீஸ்வரி இடமிருந்து தப்பித்த நிலையில் அபிராமி கார்த்திக்கு போன் செய்து நான் கோவில் பக்கத்துல தான் இருக்கேன் எனக்கு உடனே என்னுடைய மருமகள்களை பார்க்கணும், என்று சொல்கிறாள்.மேலும் நீ அவங்கள கோவில்ல இருக்கே கூட்டிட்டு வா இல்லனா நான் கிளம்பி அங்க வந்துருவேன் என்று சொல்லி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள். தன்னுடன் வந்து இளையராஜாவின் ஃபோனையும் ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறாள். இதனால் கார்த்திக் சாமுண்டீஸ்வரியின் மூன்று மகள்களையும் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இந்த சமயத்தில் ஸ்வேதாவிடம் வா கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல அவள் இப்போ அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க என்று சொல்கிறாள்.பிறகு உங்க அக்காக்களிடம் போய் நான் சொல்ற மாதிரி சொல்லு என நீ கோவிலுக்கு கூப்பிட்டா நான் வர மாட்டுறேனு சொல்லு என்று சொல்ல ஸ்வேதாவும் அப்படியே சொல்ல மற்ற இரண்டு பேரும் வந்து அவ கோவிலுக்கு கூப்பிட்டா போக மாட்டியா என சத்தம் போடுகின்றனர். ஒருத்தருக்காக எல்லாம் பெட்ரோல் செலவு பண்ணிக்கிட்டு கோவிலுக்கு போக முடியாது நீங்க மூணு பேரும் வருவதாக இருந்தா வாங்க கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறான்.இதைத்தொடர்ந்து மூன்று பேரும் கோவிலுக்கு கிளம்ப இங்கே அபிராமி மற்றும் இளையராஜா ஆகியோர் தங்களது கெட்டப்பை எளிமையானவர்கள் போல மாற்றிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன