Connect with us

டி.வி

முதல்முறை மகளை அறிமுகம் செய்த சீரியல் நடிகை: கணவருடன் சூப்பர் போஸ் வைரல்!

Published

on

Rithika Tamil Selvi

Loading

முதல்முறை மகளை அறிமுகம் செய்த சீரியல் நடிகை: கணவருடன் சூப்பர் போஸ் வைரல்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா தற்போது தனது கணவர் மற்றும் குழநதையுடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.பாக்கியலட்சுமி சீரியலில், திருமணமாகி கணவனை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் அமிர்தா கேரக்டர் பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொண்டார். இதில் அமிர்தா – எழில் கேரக்டர் இடையேயான ரொமான்ஸ் மற்றும் பாக்யா எழில் கேரக்டர்களுக்கு இடையிலான பாசம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் அமிர்தா கேரக்டருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. இதனிடையே கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்ட நிலையில், அடுத்து நில வாரங்களில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். சீரியலில் இருந்து விலகினாலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா தமிழ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், அவரது பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. திருமணமாகி தனது கணவருடன் ஹனிமூன் சென்ற ரித்திகா, அங்கிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலானது. அதனைத் தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், சமீபத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)இந்நிலையில், குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து ரித்திகா தனது மகள் மற்றும் கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதயம் கலந்த எமோஜியுடன் ரித்திகாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன