வணிகம்
மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட்க்கு அதிக வட்டி; எந்த வங்கிகள் தெரியுமா?

மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட்க்கு அதிக வட்டி; எந்த வங்கிகள் தெரியுமா?
முதலீடுகள் என்று வரும்போது, மூத்த குடிமக்கள் எப்போதும் தங்கள் ஓய்வூதிய நிதியைப் பாதுகாக்க விரும்புவதால் ஆபத்து இல்லாத முறைகளையே தேடுகிறார்கள். எனவே அவர்கள் பெரும்பாலும் வைப்பு நிதியை தேர்வு செய்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகப்படியான வட்டிகளை வைப்பு நிதிக்கு வழங்கி வருகின்றன.மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதியின் வட்டிகள், மற்ற வைப்பு நிதிக்கான வட்டிகளை விட 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும். இதன் முதலீட்டு காலம் 10 ஆண்டுகள் வரை இருக்கும். இந்தப் பதிவில் வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி வழங்கக் கூடிய 10 தனியார் வங்கிகள் குறித்து பார்க்கலாம். எஸ்.பி.எம் வங்கி: இங்கு மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு 8.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு ஆண்டிற்கு 7.55 சதவீதம், மூன்று ஆண்டுகளுக்கு 7.80 சதவீதம், ஐந்து ஆண்டுகளுக்கு 8.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.ஆர்.பி.எல் வங்கி: இங்கு அதிகபட்சமாக 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, ஒன்று மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு 8.00 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு 7.60 சதவீதமும் கிடைக்கிறது.பந்தன் வங்கி: இங்கு மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதிக்கு ஒரு ஆண்டிற்கு 8.55 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7.75 சதவீதம் மற்றும் 6.60 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.டிசிபி வங்கி: இந்த வங்கியில் வைப்பு நிதிக்கு அதிகபட்சமாக 8.55 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 7.60 சதவீதம், மூன்று ஆண்டுகளுக்கு 8.05 சதவீதம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7.90 சதவீதம் கொடுக்கப்படுகிறது.இண்டஸ்இன்ட் வங்கி: இந்த வங்கியில் ஒன்று மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான மூத்த குடிமக்கள் வைப்பு நிதிக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு 7.75 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது.யெஸ் வங்கி: இங்கு அதிகபட்சமாக 8.25 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், ஒரு ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டியும், மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 8 சதவீத வட்டியும் வைப்பு நிதிக்கு வழங்கப்படுகிறது.ஐடிஎஃப்சி வங்கி: இந்த வங்கியில் மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 7 சதவீதமும், மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7.30 சதவீதம் மற்றும் 7.25 சதவீதம் வட்டி கொடுக்கின்றனர்.தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி: இங்கு அதிகபட்சமாக 8.25 சதவீத வட்டி வழங்குகின்றனர். மேலும், ஒரு ஆண்டிற்கு 7.50 சதவீதம் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7 சதவீதமும் வழங்குகின்றனர்.கர்நாடகா வங்கி: இந்த வங்கியில் 8 சதவீத வட்டி கொடுக்கின்றனர். ஒரு ஆண்டு வைப்பு நிதிக்கு 7.85 சதவீதமும், மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.டிபிஎஸ் வங்கி: இங்கு அதிகமாக 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றனர். ஒரு ஆண்டுக்கு 7.50 சதவீதமும், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டியும் கொடுக்கின்றனர்.இந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்காக அவர்களின் வைப்பு நிதிக்கு அதிக வட்டி வழங்குகின்றனர். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“