இலங்கை
யாழில் ஊருக்குள் பாரிய முதலையால் பரப்பு!

யாழில் ஊருக்குள் பாரிய முதலையால் பரப்பு!
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் உள்ள மூத்த விநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.
அங்குள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.