இலங்கை
யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் முன்னெடுப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் கடந்த சனிக்கிழமை(16) காலை 9 மணியளவில் இரத்ததானம் மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் பணிப்பாளர் பேராசிரியர் றொபின்சன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ச)