இலங்கை
யாழ். போதனா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்!

யாழ். போதனா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர்!
யாழ். போதனா மருத்துவமனைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , மருத்துவமனையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.
மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.
அத்துடன், சுகாதார அமைச்சர் மருத்துவர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா மருத்துவமனைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். (ப)