Connect with us

உலகம்

ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி

Published

on

Loading

ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி

ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதனால் இந்த இரு நாடுகளிலும், மக்கள் தொகை எண்ணிக்கையில் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக வலிமையான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவுக்கு இந்த மக்கள் தொகை பெருக்கம் குறைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே மக்கள் தொகையை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழுவிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாலியல் அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்யலாம் என்று சிலர் ஆலோசனை கூறியிருந்தனர். இந்த ஆலோசனை ஏற்று செக்ஸ் விவகார அமைச்சகத்தை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இதே போன்று மக்கள் தொகையை அதிகரிக்க மற்ற எந்தெந்த வழிகளை கையாளலாம் என்பது பற்றியும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அதாவது பொதுமக்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தங்கள் வீடுகளில் இன்டர்நெட், விளக்குகளை அணைத்து விட்டு குழந்தைகளை உருவாக்க உடலுறவு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இன்னொரு ஆலோசனையில், வீட்டிலேயே தங்கி தங்களது குழந்தைகளை வழக்கும் பெண்களுக்கு அரசு தரப்பில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் இந்திய மதிப்பில் ரூ. 5000 வரை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதே போன்று திருமண ஜோடிகள் உடலுறவுக்காக ஹோட்டல்களில் அறைகளை எடுத்துக் கொள்ள அரசு பணம் ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்காக இந்திய மதிப்பில் 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு தம்பதிக்கு வழங்கலாம் என்று ஆலோசனையின் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று ரஷ்யா அமைச்சர்களும் உடலுறவை ஊக்கப்படுத்திய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். வாழ்க்கை மிக வேகமாக பறக்கிறது என்று கூறியுள்ள அந்நாட்டு அமைச்சர் ஒருவர், மதிய உணவு, காபி இடைவேளைகளின்போது சந்ததிகளை உருவாக்க உடலுறவில் ஈடுபடலாம் என்று கூறியுள்ளார். இதேபோன்று இன்னும் சில மக்கள் தொகை பெருக்க நடவடிக்கைகளை ரஷ்ய அரசு மேற்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன