Connect with us

உலகம்

ராணி எலிசெபத்துக்கு பின் 2வது தலைவர்… பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது!

Published

on

Loading

ராணி எலிசெபத்துக்கு பின் 2வது தலைவர்… பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது.

நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக இந்த விருது பெறும் இரண்டாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

Advertisement

அதேநேரம், பிரதமர் நரேந்திர மோடி பெறும் 17 ஆவது சர்வதேச விருது இதுவாகும். மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியா சென்றடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முதலில் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவிற்கு சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபு உடன், இந்தியா-நைஜீரியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, “G20” மாநாட்டில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு “G20” மாநாட்டை நடத்திய நாடு என்ற முறையில், இந்தியாவிற்கு “டிரோய்கா” உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “G20” மாநாட்டை முடித்துவிட்டு, புதன்கிழமை கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்ஃபான் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Also read | ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய டெல்லி அமைச்சர்… யார் இந்த கைலாஷ் கெலாட்?

கயானாவில் இந்தியா-கேரிகோம் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கரீபியன் நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு கரீபியன் நாடுகளில் ஒன்றான டொமினிக்காவின் மிக உயரிய விருது வழங்கப்படவுள்ளது.

Advertisement

கயானாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதுடன், இந்தியர்களுடனும் கலந்துரையாட உள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன