விளையாட்டு
13 வயது இளம் வீரனை வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!

13 வயது இளம் வீரனை வாங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ்!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான நடைபெறும் ஏலத்தில் 13வயதான வைபவ் சூர்யாவன்ஷியை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 1கோடியே 10லட்சம் ரூபாவுக்கு வாங்கியுள்ள அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நேற்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற ஏலத்தில் 13 வயது சிறுவன் சூர்யாவன்ஷிக்கு 30லட்சம் ரூபா அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை தமது அணிகளுக்காக வாங்க ராஜஸ்தானும் டெல்லியும் போட்டி போட இறுதியில் 1கோடியே 10லட்சம் ரூபா அறிவித்து சூர்யாவன்ஷியை ராஜஸ்தான் வாங்கிக்கொண்டது.
பிஹாரைச் சேர்ந்த சூர்யாவன்ஷி சென்னையில் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான யூத் ரெஸ்ட் தொடரில் 62 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பெற்று அனைவராலும் பேசப்பட்டார்.