Connect with us

தொழில்நுட்பம்

3 கலர் ஆப்ஷன்களில் விரைவில் அறிமுகமாக உள்ள Realme 14X மொபைல்…!!! விவரங்கள் உள்ளே…

Published

on

Loading

3 கலர் ஆப்ஷன்களில் விரைவில் அறிமுகமாக உள்ள Realme 14X மொபைல்…!!! விவரங்கள் உள்ளே…

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் விரைவில் தனது Realme 14X மொபைலை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது அறிமுகமாகும் என்ற தகவல்களை நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும், இந்த மொபைல் குறித்த சில விவரங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதனிடையே சமீபத்திய ஒரு புதிய அறிக்கை Realme 14X-ன் லான்ச் டைம்லைன் மற்றும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கான்ஃபிகரேஷன்ஸ் குறித்து குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் வரவிருக்கும் இந்த புதிய மொபைலின் பேட்டரி திறன் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு யோசனையையும் சமீபத்திய அறிக்கை நமக்கு வழங்குகிறது. புதிய Realme 14X மொபைலானது எதிர்பார்க்கப்படும் Realme 14 Pro மற்றும் Realme 14 Pro+ மாடல்களுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Realme 14X மொபைலின் எதிர்பார்க்கப்படும் லான்ச் டைம்லைன்…

Realme 14X மொபைலானது டிசம்பர் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என்று தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டி 91Mobiles-ன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த மொபைல் கிரிஸ்டல் பிளாக், கோல்டன் க்ளோ மற்றும் ஜூவல் ரெட் ஆகிய கலர் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, இந்த மொபைல் 6GB + 128GB, 8GB + 128GB மற்றும் 8GB + 256GB வேரியன்ட்ஸ்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. Realme 14X மொபைலானது 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். மேலும் ஸ்கொயர்-ஷேப்ட் கேமரா மாட்யூலை கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மொபைல் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஆன்லைனில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்த ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 12x 5G மொபைலின் வெற்றியை தொடர்ந்து Realme 14X அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி நிறுவனம் 13x மாடலை அறிமுகப்படுத்த போவதில்லை. Realme 12 x 5G மொபைலானது 50MP பிரைமரி சென்சார் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டரைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க:வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்வது எப்படி? – எளிய வழிமுறைகள்….

இந்த மொபைலில் 45W SuperVOOC சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரி மற்றும் MediaTek Dimensity 6100 + SoC கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜூடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, RMX990 என்ற மாடல் நம்பர் கொண்ட Realme 14 Pro Lite மாடல் வரவிருக்கும் Realme 14 சீரிஸில் இணையலாம் என்று ஒரு அறிக்கை பரிந்துரைத்தது. இது 8GB + 128GB, 8GB + 256GB, 12GB + 256GB மற்றும் 12GB + 512GB ஆப்ஷன்களில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன