Connect with us

வணிகம்

EPFO: ஆதார் OTP-ஐ பயன்படுத்தி ​​UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

Published

on

Loading

EPFO: ஆதார் OTP-ஐ பயன்படுத்தி ​​UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. புதிய விதிகளுக்குப் பிறகு, பாஸ்புக்குகளைப் பார்ப்பது, ஆன்லைனில் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது போன்ற செயல்பாடுகள் முன்பை விட எளிதாக இருக்கும். ஆனால் அதற்கு ஊழியர்கள் முதலில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். EPFO அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் UAN (யுனிவர்சல் அக்கவுன்ட் எண்) ஆக்டிவேஷனை கட்டாயமாக்கியுள்ளது. எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (ELI) திட்டத்தைப் பெறுவதற்கு ஊழியர்களின் யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர் (UAN) ஆக்டிவில் உள்ளதா என்பதை உறுதிசெய்யுமாறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான OTP ஐ பயன்படுத்தி ஊழியர்களின் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பரை (UAN) செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) உத்தரவிட்டுள்ளது. இந்த OTP மூலம் UAN ஐ செயல்படுத்திய பிறகு ஊழியர்கள் EPFO ​​இன் விரிவான ஆன்லைன் சேவைகளை எளிதாகப் பெற முடியும்.

Advertisement

நிறுவனங்கள், 2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்குள், தற்போதைய நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான OTP மூலம் UAN ஆக்டிவேட் செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (ELI) திட்டத்தைப் பெறுவதற்கு ஊழியர்களின் UAN ஆக்டிவேட்டில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் EPFO ​​க்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : பர்சனல் லோன் வாங்குவதற்கு என்னென்ன எலிஜிபிலிட்டி இருக்க வேண்டும்?

UAN -ஐ ஆக்டிவேட் செய்ய இபிஎஃப் உறுப்பினர்களுக்கு EPFO ​​இன் விரிவான ஆன்லைன் சேவைகளுக்கான தடையற்ற அக்சஸ்-ஐ வழங்குகிறது. இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கை நிர்வகிக்கலாம், PF பாஸ்புக்கை டவுன்லோட் செய்து பார்க்கலாம், பணத்தை எடுக்கலாம், அட்வான்ஸ் தொகையை பெறலாம். பண பரிமாற்றங்களை செய்ய இபிஎஃப் சப்ஸ்கிரைபர்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் க்ளெய்ம்களை ரியல் டைமில் டிராக் செய்யலாம். இந்த புதிய விதிகளானது ஊழியர்களுக்கு 24/7 மணி நேர EPFO ​​சேவைகளை தங்கள் வீடுகளில் இருந்தே அக்சஸ் செய்ய அனுமதிக்கிறது, இதன் காரணமாக EPFO ​​அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரும் தேவை நீக்கப்படுகிறது.

Advertisement

ஆதார் அடிப்படையிலான OTP ஐப் பயன்படுத்தி UAN ஐ எவ்வாறு செயல்படுத்துவது?: 

1. EPFO ​​மெம்பர் போர்ட்டலுக்குச் செல்லவும்.

2. “இம்பார்டெண்ட் லிங்க்ஸ்” என்பதன் கீழ் உள்ள “ஆக்டிவேட் UAN” லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

Advertisement

3. UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை என்டர் செய்யவும்.

4. EPFO இன் டிஜிட்டல் சேவைகளை அக்சஸ் செய்ய, ஊழியர்கள் தங்கள் மொபைல் எண், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

5. ஆதார் OTP வெரிஃபிகேஷனுக்கு ஒப்புக்கொள்ளவும்.

Advertisement

6. உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற, “கெட் ஆதோரைசேஷன் பின்” என்பதைக் கிளிக் செய்யவும்.

7. ஆக்டிவேஷனை முடிக்க OTP ஐ என்டர் செய்யவும்.

8. வெற்றிகரமாக ஆக்டிவேஷன் செய்யப்பட்ட உடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்டு அனுப்பப்படும்.

Advertisement

இதனையடுத்து UAN ஆக்டிவேஷனில் பேஸ் ரெகக்னைசேஷன் டெக்னாலஜி மூலம் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் சேவை சேர்க்கப்படும். இது ஊழியர்களை டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதையும், திட்டங்களின் நேரடிப் பலன்களை வழங்குவதையும் மற்றும் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை தடையின்றி பெறுவதையும் உறுதி செய்கிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன