விளையாட்டு
IPL Auction 2025 : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்… வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு கைப்பற்றிய மும்பை அணி…

IPL Auction 2025 : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேட்ஸ்மேன்… வில் ஜேக்ஸை ரூ. 5.25 கோடிக்கு கைப்பற்றிய மும்பை அணி…
வில் ஜேக்ஸ்
ஐபிஎல் ஏலத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான அதிரடி பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸை (Will Jacks) மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் முக்கிய வீரர்கள் பலர் விலைக்கு வாங்கப்பட்ட நிலையில், இன்று 2 ஆவது நாள் ஏலம் தொடர்கிறது.
இதில் இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரை தக்க வைத்துக் கொள்ள பெங்களூரு அணிக்கு ஆர்டிஎம் வாய்ப்பு இருந்தபோதிலும் அதனை அந்த அணியின் நிர்வாகிகள் பயன்படுத்தவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய ஆட்டக்காரராக இருக்கும் டிம் டேவிட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 3 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரை வாங்குவதற்கு சன்ரைசர்ஸ் அணி ஆர்வம் காட்டிய நிலையில், ஏலத்தில் பெங்களூரு அணி கைப்பற்றியது.
அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட கொல்கத்தா அணியை சேர்ந்த மணிஷ் பாண்டேவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 75 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.