Connect with us

வணிகம்

Korean Food in Tuty: சவர்மா எல்லாம் இதுக்கு முன்னாடி சாதாரணம்… கொரியன் ஃபுட் கொரிக்க விரும்பும் இளசுகள்…

Published

on

Loading

Korean Food in Tuty: சவர்மா எல்லாம் இதுக்கு முன்னாடி சாதாரணம்… கொரியன் ஃபுட் கொரிக்க விரும்பும் இளசுகள்…

இன்றைய கால இளவட்டம் மத்தியில் கொரியன் கல்ச்சர் அதிகளவில் பரவி வருகின்றது‌. கே பாப், கொரியன் சீரிஸ்களை கண்டு ரசித்த இவர்கள் தற்போது அவர்கள் பயன்படுத்தும் உடைகள், உபயோகப்படுத்தும் பொருட்கள், மேக்கப் கிட் போன்றவற்றை உபயோகித்து அவர்களது லைஃப்ஸ்டைலை பின்பற்றத் துவங்கியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது உணவில் வகைகளிலும் கொரியன் மீதான பிரியம் பிரதிபலிக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி V.E ரோட்டில் கொரியன் பாவோ பன் கடை செயல்பட்டு வருகிறது. “பால் பன், பட்டர் பன் கேள்வி பட்டதுண்டு அது என்ன பவோ பன்” என்று நீங்கள் யோசிப்பது கேட்கின்றது‌. பவோ பன் என்பது கொரியாவின்‌ ஃபேமஸான உணவாகும்.

Advertisement

இந்த பாவோ பன் குறித்துக் கடை உரிமையாளர் சுதாகர் கூறுகையில், “விளையாட்டு மேல் எனக்கு மிகவும் ஆர்வமுள்ளதால் தூத்துக்குடியில் ஜுடோ(zudo) பயிற்சியாளராக இருந்து வருகிறேன். சிறுவயதில் இருந்து பிஸ்னஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் துவங்கப்பட்டதே இந்த உணவு கடை.

இதையும் படிங்க: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பணிகள் விறுவிறு… திறப்பு எப்போது தெரியுமா…

பவோ அப்படி என்றால் கொரியன் உணவு. சவர்மாக்கு பதிலாக பிரஷ்ஷா கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது தான் இந்த பவோ கடை. சவர்மா என்பது அனைவருக்கும் தெரியும் அதைப் போல் வேறு உணவை அறிமுகப்படுத்தத் தான் இந்த பவோ பன். சமுக வலைத்தளங்களில் பார்த்துத் தான் காத்துக் கொண்டேன். மேலும் இது தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அமோகமாக விற்பனை ஆகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன