திரை விமர்சனம்
அண்ணே வாராரு வழிவிட்டு! மங்காத்தா என்ன மங்காத்தா! அஜித் ரசிகரின் முரட்டு Review!

அண்ணே வாராரு வழிவிட்டு! மங்காத்தா என்ன மங்காத்தா! அஜித் ரசிகரின் முரட்டு Review!
டேய் என்னங்கடா அஜீத் fans எல்லாம் தளபதி படத்தையும் celebrate பண்ணிட்டு இருக்கீங்க? என்பது போலத்தான் தற்போது நடந்து வருகிறது. தளபதியின் கோட் திரைப்படத்தின் முதல் காட்ச்சியை பார்த்த அஜித் ரசிகர்கள் இவ்வாறு தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஒருபக்கம் ரசிகர்களின் விமர்சனங்கள் கிடைத்து வரும்நிலையில் திரையரங்கிற்குள் ரசிகர்கள் திரண்டு ஓடும் வீடியோ ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. “வேறமாதிரி செய்து இருக்காரு வெங்கட் பிரபு, அஜித் ரசிகன் தான் ஆனாலும் சொல்லுறேன் மங்காத்தா என்ன மங்காத்தா வச்சி செஞ்சிட்டாரு கோட் படத்துல வெங்கட், 1ஸ்ட ,2ண்ட பாட் எல்லாமே சூப்பரா இருக்கு, டுவிஸ்டுக்கு மேல டுவிஸ்ட் வச்சி தியேட்டரை அலறவிட்டு இருக்காங்க. 3 மணிநேரம் ஆனா நேரம் போறதே தெரியாது. கண்டிப்பா படம் 1000 கோடி அடிக்கும் அதுக்கு மேலையும் அடிக்கும் என்று கூறிவருகின்றனர். மேலும் திரையரங்கம் திறந்த பின்னர் விஜய் ரசிகர்கள் அலைபோல திரண்டு தியேட்டர் உள்ளே செல்லும் காட்சி பார்ப்போரை நெகிழவைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.