சினிமா
அதே டெய்லர் அதே வாடகை.. கீர்த்தி சுரேஷ் முதல் நயன்தாரா ட்ரெஸ் வரை!! ட்ரோல் வீடியோ..

அதே டெய்லர் அதே வாடகை.. கீர்த்தி சுரேஷ் முதல் நயன்தாரா ட்ரெஸ் வரை!! ட்ரோல் வீடியோ..
இந்திய சினிமவில் ஹீரோக்கள் கத்தியை தூக்கி சண்டைப்போடும் ஆக்ஷன் படங்களைத்தான் முக்கிய அம்சம் என்று நினைத்து கொண்டு கிரிஞ்ச் செய்து வருகிறார்கள்.அவர்களை போல் தற்போது ஹீரோயின்களும் கத்தி, துப்பாக்கிகளை தூக்கிக்காட்டி படங்களில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை நயன் தாராவின் பிறந்தநாளுக்கு வெளியான ராக்காயி டீசரை பார்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது தான் தற்போதைய பேசு பொருள்.ஏற்கனவே கீர்த்தி சுரேஷின் சாணிக்காயிதம் படம் வெளியானது. அவரை தொடர்ந்து பிரியங்கா மோகன் நடித்த கேப்டன் மில்லர் வெளியானது. அதேப்போல் சமீபத்தில் நடிகை அனுஷ்கா செட்டி நடித்துள்ள Ghaati படத்தின் டீசரும் வெளியானது.இந்த படங்களில் நடித்த நடிகைகள் ஒரே மாதிரியான புடவை கட்டி நடித்துள்ளது தான் ட்ரோலாகியுள்ளது. அதே டெய்லர் அதே வாடகை என்று குறிப்பிட்டு நயன் தாராவின் ராக்காயி படத்தின் டீசரை கலாய்த்து வருகிறார்கள்.