Connect with us

திரை விமர்சனம்

இந்திய ராணுவ வீரராகவும், லவ்வர் பாயாகவும் திரையில் ஜொலிக்கும் SK! ட்விட்டர் விமர்சனம்

Published

on

Loading

இந்திய ராணுவ வீரராகவும், லவ்வர் பாயாகவும் திரையில் ஜொலிக்கும் SK! ட்விட்டர் விமர்சனம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அமரன் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.இதுவரையில் போலீஸ், நர்ஸ், வயதானவர் என்று பல கேரக்டர்களை ஏற்று நடித்த சிவகார்த்திகேயன், முதல் முறையாக ராணுவ வீரர் கெட்டப்பில் தோன்றியுள்ளார். அவர் ராணுவ வீரராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளார்.இந்த நிலையில், அமரன் படம் தொடர்பாக இன்றைய தினம் தனது இன்ஸ்டா பதிவில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, அமரன் படம் வெளியானதை குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது அமரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது. அதனை விரிவாக பார்ப்போம்.அமரன் படத்தின் விமர்சனம் பற்றி ரசிகர்கள் எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். தீபாவளி தினமான இன்றைய தினம் வெளியான படங்களிலேயே அமரன் படம் திரையரங்குகளில் ஜொலித்து வருகிறது.. இந்த படத்தில் மந்தமான காட்சிகள் எதுவும் இல்லையாம். அருமையான தருணங்கள் ஏராளமாக காணப்படுகின்றது. ஒவ்வொரு காட்சியும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் ரசிகர்களை சலிப்படைய வைக்காமலும் காணப்படுகிறது.அமரன் படத்தின் முதல் பாதி உணர்ச்சியால் நிரம்பி உள்ளதாம். இந்த படத்தில் எஸ்கேயின் பயணம் பவர்ஃபுல்லாக காணப்படுகின்றது. சாய்பல்லவி நடிப்பும் பிரம்மிக்க வைத்துள்ளது. ஒரு பக்கம் இந்திய இராணுவ வீரரின் முகமாகவும் இன்னொரு பக்கம் லவ்வர் பாயாகவும் ராணுவ வீரராகவும் சிவகார்த்திகேயன் ஜொலித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன