சினிமா
இந்தி பிக்பாஸில் ஸ்ருத்திகாவுக்கு என்ன ஆச்சு.. காரணமே அந்த பெண் போட்டியாளரா?

இந்தி பிக்பாஸில் ஸ்ருத்திகாவுக்கு என்ன ஆச்சு.. காரணமே அந்த பெண் போட்டியாளரா?
தமிழ் பிக்பாஸ் 8ஐ தாண்டி இந்தி பக்கம் சென்று பிக்பாஸ் சீசன் 18ல் கலந்து, கலக்கிக் கொண்டு வருபவர் தான் குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா அர்ஜுன். ஆரம்பத்தில் பாலிவுட்டையே அதிர வைத்து வந்த ஸ்ருத்திகாவை பல போட்டியாளர்கள் டார்க்கெட் செய்தனர்.அதையும் கண்டுக்கொள்ளாமல் ஸ்ருத்திகா சிறப்பாக விளையாடி வந்தார். திடீரென ஸ்ருத்திகாவுக்கு என்ன ஆச்சு என்பது போல் ஒருவிதமான ரியாக்ஷன்களை கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்றைய பிரமோ வீடியோவில், ஸ்ருத்திகா பைத்தியம் பிடித்தது போல் கதறி அழும் வீடியோ வெளியாகி வைரலாகியது.இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ள வருகிறார்கள். அதாவது போட்டியாளர்களின் உணவை கரண் சாப்பிட்டுவிட்டதை ஸ்ருத்திகா தப்பு என்று விவாதம் செய்திருக்கிறார்.ஷில்பா கரணிடம் ஏதேதோ சொல்லி ஏற்றிவிட்டுள்ளார். கரண் நெருங்கிய தோழனாக இருந்த கரண், ஷில்பா தன்னை அசிங்கப்படுத்தி பேசியதால் தான் ஸ்ருத்திகா இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்று இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.