சினிமா
இன்னுமா முடியல? எப்படா ரிலீஸ் பண்ணுவீங்க! விடாமுயற்சி கடைசி ஷூட்டிங்!

இன்னுமா முடியல? எப்படா ரிலீஸ் பண்ணுவீங்க! விடாமுயற்சி கடைசி ஷூட்டிங்!
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியே இரண்டு வருடம் நெருங்கிவிட்ட நிலையில் இன்னமும் படத்தின் ஷூட்டிங் நடந்தவண்ணம் உள்ளது. அஜித்குமார் துணிவு படத்தை முடிந்த கையோடு அதை தொடர்ந்து மகிழ் திருமேனியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தனர்.இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்தது. ஷூட்டிங் அஜர்பைனாலில் நடைபெற்றது. அதன் பின்னர் ஆறு மாதம் அஜித் பைக் ரேஸ் சென்றதால் ஷூட்டிங் தள்ளிப்போனது. பின்னர் கடந்த வருடம் அக்டோபரில் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அஜித். தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் என படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிக்கொண்டே சென்றது. அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது குட் பேட் அக்லி அந்த இடத்தை பிடித்து இருக்கிறது.d_i_aஇதனால் அஜித்தின் விடாமுயற்சி மே மாதம் ரிலீஸாகும் என தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 11ந் தேதி தொடங்கப்பட இருக்கிறதாம். இதில் அஜித், அர்ஜூன் மற்றும் திரிஷா கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எப்போது ரிலீஸ் செய்ய போறீங்க என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.