இலங்கை
இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு இன்று நீதி கோரி போராட்டம்!

இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு இன்று நீதி கோரி போராட்டம்!
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட, இலங்கையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும், அவை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
முல்லைத்தீவு – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு அருகாக இடம்பெறவுள்ளது.
கொக்குத்தொடுவாயிலும், இலங்கையின் இதர பகுதிகளிலும் இதுவரை பல்வேறு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிலும், அது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று, உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, இன்றைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.