உலகம்
ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் ரஷ்யா தாக்குதல்!

ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் ரஷ்யா தாக்குதல்!
நூற்றுக்கணக்கான ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைனின் பல பகுதிகளிலும் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் கட்டடங்கள் உட்பட முக்கிய உட்கட்டமைப்புகள் பல சேதமடைந்துள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.
ட்ரோன்கள் மூலம் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவிலிருந்து சுமார் 188 ட்ரோன்கள் ஏவப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன்-ரஷ்ய போரில் ஆயிரமாவது நாள் கடந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட ஆயிரக்கணக்கான வட கொரிய இராணுவ சிறப்புப் படையினரை ரஷ்யா வரவழைத்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.இந்நிலையில், உக்ரைனின் நீப்ரோ பெட்ரோவ்ஸ்க் நகர் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐ.சி.பி.எம்) வகையைச் சோ்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடாத்தியது.
தாங்கள் உருவாக்கியுள்ள ஆரேஷ்னிக் என்ற அதிநவீன புதிய ரக ஏவுகணைகள் உக்ரைன் மீது வீசப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீா் புட்டின் எச்சரித்துள்ளார்.