Connect with us

சினிமா

சூர்யாவின் கங்குவா படம் 100 கோடி நஷ்டமா? உண்மை இதுதான்

Published

on

Loading

சூர்யாவின் கங்குவா படம் 100 கோடி நஷ்டமா? உண்மை இதுதான்

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகி வெளிவந்த கங்குவா படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதனால் படத்தின் வசூலும் எதிர்பார்த்த உயரத்தை தொடவில்லை.இந்த நிலையில், கங்குவா படம் ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை கொடுத்துள்ளது என தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இந்த நிலையில், இயக்குனர், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள், கங்குவா படத்தின் நஷ்டம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.இதில் கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 170 கோடி தான் இருக்கும் என்றும், படம் வெளிவருவதற்கு முன்பே சாட்டிலைட் மற்றும் OTT விற்பனை ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். இதனால் படம் ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு கணிசமான தொகை கிடைத்துவிட்டதாம்.திரையரங்கம் மூலம் பெரிய வசூல் வரும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் தோல்வி காரணமாக அந்த வசூல் கிடைக்கவில்லை. ஆகையால் கங்குவா படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன