தொழில்நுட்பம்
தனது முதல் ஃபிளிப் போனை எப்போது அறிமுகப்படுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம்…? வெளியான விவரம்…

தனது முதல் ஃபிளிப் போனை எப்போது அறிமுகப்படுத்துகிறது ஒன்பிளஸ் நிறுவனம்…? வெளியான விவரம்…
ஒன்பிளஸ் நிறுவனம் கிளாம்ஷெல் ஃபோல்டபிள் ஃபோன் செக்மென்ட்டில் நுழைய தயாராகி வருவதாக தெரிகிறது. நம்பகமான சீன டிப்ஸ்டரான Digital Chat Station வெளியிட்டுள்ள புதிய தகவலானது நிறுவனத்தின் முதல் ஃபிளிப்-ஸ்டைல் ஃபோல்டபிள் மொபைல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கிறது.
இந்த மொபைல் OnePlus V Flip என்று அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பனை தொடர்ந்து இது பிராண்டின் இரண்டாவது ஃபோல்டபிள் டிவைசாக இருக்கும். இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
OnePlus V Flip லான்ச் டைம்லைன்..
OnePlus V Flip சில காலமாக ஊகங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. முந்தைய அறிக்கைகள் இது ரீபிராண்டட் Oppo Find N5 Flip-ஆக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள் வரவிருக்கும் OnePlus V Flip மாடலானது Oppo Find N5 Flip போல இருக்காது என்று அழுத்தமாக சுட்டிக்காட்டுகின்றன். அதாவது ஒன்பிளஸின் வரவிருக்கும் கிளாம்ஷெல் ஒரு தனித்துவமான வடிவமைப்பு மற்றும் விவரக் குறிப்புகளைக் கொண்டிருக்கலாம் என்பதை இந்த சமீபத்திய அப்டேட்ஸ்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் OnePlus V Flip டிவைஸானது பிரீமியம் அம்சங்கள் மற்றும் போட்டி விலையுடன் தன்னை வேறுபடுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட ஃபிளிப் மொபைலை தவிர, நிறுவனம் அடுத்த தலைமுறை ஒன்பிளஸ் ஓபன் 2-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த டிவைஸின் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நிறுவனம் அளிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒன்பிளஸ் ஓபன் 2 மாடலானது வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் கூடிய 5,700mAh பேட்டரி பேக்கை கொண்டிருக்கக் கூடும் என்று கசிந்துள்ள தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது அதன் முன்னோடியில் இருக்கும் 4,805mAh பேட்டரி திறனில் இருந்து அதிக திறன் கொண்ட பேட்டரி இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
இதையும் படிக்க:
ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள்…
பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டாலும் இந்த மொபைல் ஸ்லிம் ப்ரொஃபைலை பராமரிக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் ஹேசல்ப்ளாட் மூலம் நன்றாக டியூன் செய்யப்பட்ட டிரிபிள்-கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். இதில் 50MP பிரைமரி சென்சார், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஆப்டிகல் ஜூம் திறன்களுடன் கூடிய பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் உள்ளிட்டவை கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க:
இந்தியாவில் ரெட்மி A4 5G மலிவு விலை ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்த சியோமி….
மேற்கண்ட தகவல்கள் 2025-ஆம் ஆண்டிற்கான OnePlus-ன் தயாரிப்புகளை பற்றிய யோசனையை வழங்கினாலும், விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஒன்பிளஸ் தனது முதல் ஃபிளிப் போனை வெளியீடும் நாள் வெகு தொலைவில் இல்லை. வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மேற்கண்ட மாடல்களை பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.