இலங்கை
துாக்கத்தில் உயிரிழந்த இளம் தந்தை; மன்னகண்டலில் சம்பவம்

துாக்கத்தில் உயிரிழந்த இளம் தந்தை; மன்னகண்டலில் சம்பவம்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னகண்டல் பகுதியில் கால்நடைகளை அடைக்கும் பட்டியில் இரவு நேர பாதுகாப்பு பணியாளராக வேலை செய்யும் நபரொருவர் நேற்றையதினம் பணிக்கு சென்று விடியும்வரை வீடு திரும்பாத நிலையில் இன்று காலை அதே பட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 வயதுடைய கந்தையா மோகனதாஸ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.